பொன்னியின் செல்வன் FDFS பார்க்க குதிரையில் கூலாக எண்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Sep 30, 2022, 6:24 AM IST

cool suresh : ‘வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு’ என்கிற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி தியேட்டருக்குள் எண்ட்ரி கொடுத்தார் கூல் சுரேஷ்.

நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை புரமோட் செய்ததில் நடிகர் கூல் சுரேஷுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர் கடந்த சில மாதங்களாகவே வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி பேசி வந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்.

இந்நிலையில், இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி இருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை காண இன்று அதிகாலை தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷின் எண்ட்ரியை பார்த்து பலரும் வியந்து போயினர். ஏனெனில் அவர் மாஸாக குதிரையில் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி கையில் ‘வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு’ என்கிற வாசகம் அடங்கிய பேனரையும் கொண்டு வந்தார்.

இதையும் படியுங்கள்... Breaking: 'பொன்னியின் செல்வன் 1 ' திரைப்படத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அவர் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும், அதனை கடன் வாங்கி வாடகைக்கு எடுத்து வந்திருப்பதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்தார். அவர் குதிரையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. வழக்கமாக ரசிகர்கள் தான் அதிகாலை காட்சிக்கு அதிகளவில் வருவார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை காண பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வந்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... மணிரத்னத்துடன் ஜம்முனு அமர்ந்திருக்கும் குந்தவை...சோசியல் மீடியாவில் அனல் பறக்க விடும் போட்டோஸ்

Latest Videos

click me!