Naane Varuven: இந்த 7 முக்கிய காரணங்களுக்காக தனுஷின் 'நானே வருவேன்' படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்!

Published : Sep 29, 2022, 08:32 PM IST

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சைக்காலஜி திரில்லரான 'நானே வருவேன்' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தை ஏன்... எதற்காக பார்க்க வேண்டும் என்கிற முக்கிய 7 காரணங்கள் இதோ...  

PREV
17
Naane Varuven: இந்த 7 முக்கிய காரணங்களுக்காக தனுஷின் 'நானே வருவேன்' படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்!

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும், திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் நாளை, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் 'நானே வருவேன்' திரைப்படம். இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன். இவர்கள் இருவரின் காம்போவை பார்ப்பதற்காகவே இந்த படத்தை நீங்கள் பார்க்கலாம்.
 

27

தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளது மட்டும் இன்றி, கதையும் எழுதியுள்ளார். ஏற்கனவே தனுஷ் கதை எழுதி இயக்கி, நடித்த பா.பாண்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்... இரண்டாவது முறையாக சைக்காலஜி திரில்லராக உருவாகியுள்ள, 'நானே வருவேன்' படத்தின் கதையை எழுதி உள்ளார். சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளது மட்டும் இன்றி.. ஒரு கதாசிரியராகவும் வெற்றி வாகை சூடியுள்ளார் தனுஷ் எனவே இந்த படம் பார்க்க வேண்டியதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

மேலும் செய்திகள்: தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் சிகிச்சை பலனின்றி காலமானார்..!
 

37

தனுஷ் -  செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள 4 ஆவது படமான 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இரண்டு கதாபாத்திரமும் தனி தன்மையுடன் உள்ளதை ரசிகர்களால் உணர முடிகிறது. எனவே திரையரங்கில் தனுஷின் அசாத்திய நடிப்பை பார்க்க மிஸ் பண்ணாதீர்கள்.
 

47

தனுஷ் - செல்வராகவன் இருவரும் இணைந்தால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என நம்பும் ரசிகர்களை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த படமும் நிரூபித்துள்ளது.

மேலும் செய்திகள்: குடும்பத்தோடு சிங்கப்பூரில் கும்மாளம் போடும் மைனா நந்தினி..! குழந்தை பெற்றபின்பும் குறையாத ரொமான்ஸ்! போட்டோஸ்
 

57

தனுஷ் - செல்வராகவன் மாஸ் என்றால்... இவர்களுடன் யுவன் இணைந்தால்... படா மாஸ் தானே. வழக்கம் போல், பின்னணி இசை முதல் பாடல்கள் வரை இசையால் தன்வசப்படுத்தியுள்ளார் யுவன்.
 

67

மேலும் இந்த படத்தை பார்த்த பலரும், 2022 ஆம் வருடம்... தனுஷுக்கு பாசிட்டிவான வருடம் என்றும்... இந்த ஆண்டிற்கான மிக சிறந்த திரில்லர் படத்தில் அவர் நடித்துள்ளதாக கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: Breaking: 'பொன்னியின் செல்வன் 1 ' திரைப்படத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
 

77

மேலும் வித்தியாசமான கதையை... சிறந்த கதையை படமாக கொடுத்தால்... எப்படிப்பட்ட பிரமாண்ட படத்துடன் மோதினாலும் அந்த படம் கண்டிப்பாக ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிபெறும் என்பதற்கு எடுத்து காட்டவே 'நானே வருவேன்' வெளியாகியுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories