'கந்த முகமே' ஆல்பம்..திருச்செந்தூர் முருகனுக்கு சமர்ப்பித்த தேனிசை தென்றல்

Published : Aug 06, 2022, 07:34 PM ISTUpdated : Aug 06, 2022, 07:37 PM IST

ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணமும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே சமர்ப்பிக்கப்படும் என இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

PREV
13
'கந்த முகமே' ஆல்பம்..திருச்செந்தூர் முருகனுக்கு சமர்ப்பித்த தேனிசை தென்றல்
composer Deva

தமிழ் சினிமாவில்  பழம்பெரும் இசை அமைப்பாளரான தேவா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழிகளிலும் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பெரும்பாலும் சென்னை தமிழில் மெட்டுக்களோடு கானா பாடலுக்கு பெயர் போன தேனிசைத் தென்றல் 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்எஸ்சி சொக்கலிங்கம் மற்றும் எம்எஸ்சி கிருஷ்ணவேணி ஆகியோரின் சகோதரர் தேவா. இசை குடும்ப பின்னணியை கொண்ட இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.  எண்பதுகளில் இருந்து இதுவரை பல பாடல்களைப் பாடியுள்ள இவர் மூன்று தலைமுறை இசையமைப்பாளராக உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...தலைவனாக சாக விரும்பவில்லை.. அரசியல் குறித்து மனம் நொந்த கமல்..

23
composer Deva

அதோடு பல ஆல்பம் சாங்குகளையும் உருவாக்கி வெளியிட்டு வருகிறார். காதல் கோட்டை படத்தில் இவர் அமைத்த இசையும் இவரது பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல ரஜினியின் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

இவர் சமீபத்தில் அமைச்சர் என்னும் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீப காலமாக பெரிய படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகாத தேவா தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் கன்னட பாடல்களுக்காகவும் விருதுகளை குறித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி..தியாவிற்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

33
composer Deva

இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்த இசை அமைப்பாளர் தேவா, செய்தியாளர்களிடம் பேசிய போது,  'திருச்செந்தூர் முருகன் பெருமானுக்காக கந்த முகமே என்னும் ஆல்பத்தை வெளியிட்டு உள்ளதாகவும், இதில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணமும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே சமர்ப்பிக்கப்படும் என கூறியுள்ளார். இவரது பேட்டி சமூகம் வலைத்தளத்தில் வைரலாக இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரியை புகழ்ந்த சீமான்...மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories