தலைவனாக சாக விரும்பவில்லை.. அரசியல் குறித்து மனம் நொந்த கமல்..

First Published Aug 6, 2022, 6:51 PM IST

தலைவன் இல்லை என்றால் நீங்கள் தலைவன் ஆகிவிடுங்கள். அதனால் தான் நான் தலைவன் ஆனேன். தகுதியை விட திறமையை விட உணர்வு எனக்கு இருக்கிறது என்று கமல் கூறியுள்ளார்.

vikram

கைதி மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படம் 400 கொடிகளுக்கு மேல் வசூலித்து அசைக்க முடியாத சாதனையை உருவாக்கியுள்ளது. அதோடு கமலஹாசனின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியுள்ள விக்ரமில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்புகளை பெற்ற இந்த படம் கமலஹாசனின் நான்கு ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு வெளியானது.

vikram movie

பிக் பாஸ், அரசியல், கொரோனா என பலகட்ட ஒத்திவைப்புகளுக்கு பிறகு விக்ரம் படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு விலை உயர்ந்த கார், துணை இயக்குனர்களுக்கு பைக், ரோலக்ஸ் ஆக வந்து கலக்கிய சூர்யாவிற்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியிருந்தார் கமல்.

மேலும் செய்திகளுக்கு...கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி..தியாவிற்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

vikram

விக்ரமின்  ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரபல யுடுயூப் ஒன்றுக்கு படக் குழு இன்டர்வியூ கொடுத்திருந்தது. இதில் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல் நான் அரசியலுக்கு வந்தபோது சில மந்திரிகள் எனக்கு மார்க்கெட் குறைந்து விட்டதால்  நான் அரசியலுக்கு வந்துவிட்டால் என சொன்னார்கள். அவர்கள் தான் அப்படி வந்திருப்பார்கள். நான் அப்படி இல்லை. இந்த மக்களுக்கு கொடுக்க வேண்டியது இப்படித்தான் கொடுக்க முடியும் தலைவனாக சாக வேண்டும் என்பது முக்கியமில்லை தமிழனாக சாக வேண்டும் என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரியை புகழ்ந்த சீமான்...மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?

vikram

அதோடு நான் நவ அரசியல் கலாச்சார வாதி, அரசியல்வாதி இல்லை. நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் அரசியல் உங்களை பாதிக்கும். நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவர் என்பது முக்கியமல்ல அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் தான். தலைவன் இல்லை என்றால் நீங்கள் தலைவன் ஆகிவிடுங்கள். அதனால் தான் நான் தலைவன் ஆனேன். தகுதியை விட திறமையை விட உணர்வு எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... அமெரிக்கன் பை கொடுத்த பரிசு..சுமார் 200 பேருடன் உடலுறவு..திடுக்கிடும் தகவலை பகிர்ந்த நடிகை  

click me!