திரை நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்களே மக்களிடம் அதிக பிரபலமாக உள்ளனர். சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பேமஸ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக உள்ள பலரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜே தியாவும் ஒருவர்.
26
vj diya
முன்னணியை தொகுப்பாளனியான இவர் சன் மியூசிக், சன் டிவி ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார் . கேரளாவை சேர்ந்த தியா மேனன், சன் மியூசிக்கல் கிரேசி கண்மணி, சுதா சுதா சென்னை மற்றும் கால் மேல காசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற தியா சன் நெட்வொர்க்கின் பிரபல தொகுப்பாளராக உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் சூர்யா டிவியில் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
46
vj diya
சிங்கப்பூர் மாநில அளவிலான கிரிக்கெட் வீரராக இருக்கும் கார்த்திக் சுப்பிரமணி என்பவரை காதலித்து கரம் பிடித்தார் தியா. இவர்களின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தனர்.
ஆனாலும் அவர் ஒவ்வொரு வாரமும் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதற்காக ஒவ்வொரு வாரமும் விமான பயணத்தை தியா மேற்கொள்வதாக கூறப்படுகிறது. தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் பிரசவத்திற்காக விடுமுறைகள் உள்ளார்.
66
VJ diya
இந்நிலையில் மற்ற பிரபலங்கள் போலவே இவரும் கர்ப்பகால புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலை பக்கத்தில் பகிர்ந்துள்ள தியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.