என்ன தான் பிரச்சனை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு? தனுஷை விவாகரத்து செய்தபின் கோவில் கோவிலாக சுத்துறாங்களே!

Published : Aug 06, 2022, 05:01 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷை விவாகரத்து செய்த பின்னர்... அடிக்கடி கோவிலுக்கு சென்று அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், அவருக்கு என்ன பிரச்சனை என நெட்டிசன்கள் அக்கறையோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

PREV
16
என்ன தான் பிரச்சனை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு? தனுஷை விவாகரத்து செய்தபின் கோவில் கோவிலாக சுத்துறாங்களே!

சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்ட போது, இதுவரை எத்தனையோ படங்கள் தான் நடித்திருந்தாலும், ஒரு நடிகராக நான் நடித்ததில் தனக்கு மிகவும் பிடித்தது, ஆன்மீக படங்களான 'ராகவேந்திரா' மற்றும் 'பாபா' திரைப்படங்கள் தான் என பேசினார். 
 

26

மேலும், உடல் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியம், மருத்துவமனைக்கு செல்லாமலேயே நன்றாக நடமாடிக் கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விடவேண்டும். நான் கூட பலமுறை மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறேன்... பணம், புகழை சேர்த்து வைத்துவிட்டு போவதை விட போகும்போது நோயாளியாக இல்லாமல் போவதுதான் முக்கியம். நான் பணம் புகழ் பெரிய அரசியல்வாதிகள் என எல்லாரையும் பார்த்துவிட்டேன், ஆனால் சந்தோஷம் என்பது 10% கூட கிடையாது என இவர் பேசியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்: தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்.. ஏன்? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!
 

36

குறிப்பாக தன்னுடைய இளைய முதல் முதல் கணவரை விவாகரத்து செய்தது ரஜினிகாந்தை மிகவும் பாதித்தது. ஒருவழியாக தற்போது அவர் இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

46

ஆனால் இவரை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக கணவர் தனுஷுடன் வாழ்ந்து  வந்த மூத்த மகள் ஐஸ்வர்யா, சமீபத்தில் தான் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தார். இந்த விவாகரத்துக்கு பின்னர் அவர் தன்னுடைய சினிமா பணிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் காட்டி வருகிறார்.

மேலும் செய்திகள்: கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!
 

56

ஆடி முதல் வெள்ளிக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வந்த இவர், தபோது ஆடி, மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு நேற்றும் கடவுளிடம் மனம் உருகி வேண்டி விளக்கு போட்டுள்ளார்.

66

இதுகுறித்த புகைப்படத்தை தற்போது ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட, உங்களுக்கு எந்த பிரச்னையும் வராமல் கடவுள் காப்பார் என, மிகவும் அக்கறையோடு சில ரசிகர்களும், உங்களுக்கு என்ன தான் பிரச்சனை என சில ரசிகர்களும் அன்பாக கேட்டு வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!
 

Read more Photos on
click me!

Recommended Stories