Published : Mar 29, 2023, 02:43 PM ISTUpdated : Mar 29, 2023, 04:54 PM IST
தமிழி சினிமாவில் ஈடு இணையில்லா காமெடி நடிகரான செந்திலுக்கு இன்று 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி விழா நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபாலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில், வடிவேலு, விவேக், சூரி, யோகிபாபு, சந்தானம் என எத்தனையோ காமெடி நடிகர்கள், கலக்கி வந்தாலும், அன்று முதல் இன்று வரை கவுண்டமணி - செந்தில் காமெடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
26
குறிப்பாக வாழை பழ காமெடி, கிரீஸ் டப்பா காமெடி, என இவர்கள் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கிய படங்கள் பல , தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நிலையில், 90-களில், செந்தில் - கவுண்டமணி இருவரும் இணைந்து நடித்தாலே... அந்த படம் கண்டிப்பாக ஹிட் என நினைக்கும் அளவுக்கு ரசிகர்கள் இவர்களின் காமெடியை வரவேற்றனர்.
சமீப காலமாக ஒரு சில காரணங்களால் செந்தில் - கவுண்டமணி இருவரும், இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டாலும், அவ்வப்போது ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளில் தலை காட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போல், வடிவேலு... சந்தானத்தை தொடர்ந்து, கவுண்டமணி கதையின் நாயகனாக ஏற்கனவே சில படங்களில் நடித்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகர் செந்திலும் தன்னுடைய 70 வயதில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
46
'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் கிக் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், சினிமாவில் பிஸியாகியுள்ள செந்திலுக்கு இன்று உலக புகழ் பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 70வது வயது பூர்த்தியை முன்னிட்டு பீமரத சாந்தி விழா நடந்துள்ளது.
அவரது 70வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மனைவி, மகன்கள், மருமகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது .
66
நடிகர் செந்தில் கோவிலுக்கு வந்த விவரம் அறிந்து ரசிகர்கள் பலர் கோவில் வளாகத்தில் கூடிய நிலையில், ரசிகர்களை சந்தித்து அனைவருடனும் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றார்.