நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் திருடுபோனதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தன் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்திருந்தார்.
அந்த நகைகள் தனது திருமணத்தின் போது வாங்கப்பட்ட நகைகள் என்றும், அதனை கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தனது தங்கையின் திருமணத்துக்கு போட்டுவிட்டு கழட்டிவைத்ததாகம். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கரை ஓபன் பண்ணி பார்த்தபோது தான் நகைகள் திருடுபோனதை கண்டுபிடித்ததாகவும், மொத்தம் 60 சவரன் நகைகள் திருடு போய் உள்ளதாகவும் ஐஸ்வர்யா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... நானா திருடல... என்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான்...! போலீஸிடம் பகீர் தகவலை வெளியிட்ட ஈஸ்வரி
இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்பவர் தான் நகையை திருடி உள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் கார் டிரைவருக்கும் இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அவர்களிடம் இருந்து 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் வீடு வாங்கியதற்கான சொத்து பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.