விவசாயம் பண்ணுங்க டா... வித்துறாதீங்க! உதவி இயக்குனர்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கொடுத்த வெற்றிமாறன்

Published : Mar 29, 2023, 01:24 PM ISTUpdated : Mar 29, 2023, 01:25 PM IST

விடுதலை படத்தில் தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 25 பேருக்கு அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் சொந்தமாக நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

PREV
14
விவசாயம் பண்ணுங்க டா... வித்துறாதீங்க! உதவி இயக்குனர்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கொடுத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடுதலை. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் வெற்றிமாறன். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி விடுதலை படத்தின் முதல் பாகத்தை வருகிற மார்ச் 31-ந் தேதி வெளியிட உள்ளனர்.

24

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி படத்தின் டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். விடுதலை படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ரஜினி வரலேனா என்ன... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ஆக வரும் மற்றுமொரு மாஸ் நடிகர்

34

இந்நிலையில், விடுதலை படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் செய்துள்ள உதவி குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 25 பேருக்கு சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் ஆளுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்திருக்கிறாராம் வெற்றிமாறன்.

44

நிலம் வாங்கிக்கொடுத்துள்ள மட்டுமின்றி அந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்றுவிடக் கூடாது என்கிற கண்டிஷனையும் போட்டுள்ளாராம். அந்த நிலத்தை விற்காமல், அதில் வீடு கட்டியோ அல்லது விவாசாயம் செய்யவோ பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளாராம் வெற்றிமாறன். உதவி இயக்குனர்களுக்கு பைக், பரிசு கொடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் அவர்களுக்கென சொந்தமாக நிலம் வாங்கி கொடுத்துள்ள இயக்குனர் வெற்றிமாறனின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்கணும்.. சீரிய பிரபல இயக்குனர்!

Read more Photos on
click me!

Recommended Stories