இளைஞர்கள் தற்கொலை முடிவு? 'கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு விழாவில் மாணவர்கள் கேள்விக்கு விக்ரம் கொடுத்த பதில்!

Published : Aug 23, 2022, 04:41 PM IST

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில்   ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்  ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

PREV
18
இளைஞர்கள் தற்கொலை முடிவு? 'கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு விழாவில் மாணவர்கள் கேள்விக்கு விக்ரம் கொடுத்த பதில்!

ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகும்  இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன்  கலந்துரையாடினர். 

28

இவ்விழாவினில் இப்படத்தில் நடித்த நடிகர் விக்ரம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகை மீனாட்சி பேசியதாவது, விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார் அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும் என்றார். 

மேலும் செய்திகள்: விக்ரமை காண திருச்சியில் கூடிய ரசிகர்கள்..! போலீசார் லத்தியால் அடித்து துரத்தியதால் பரபரப்பு..! வைரல் வீடியோ..
 

38

இவரை தொடர்ந்து, நடிகை மிருணாளினி பேசுகையில், முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றார்.  

48

பின்னர் இந்த படத்தின் நாயகி ஶ்ரீநிதி ஷெட்டி பேசியதாவது, தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார். 

மேலும் செய்திகள்: ஸ்லிம் பிட் அழகியாக மாறிய வரலட்சுமி சரத்குமார்..! அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனியில் கவர்ச்சி அட்ராசிட்டி..!
 

58

இவர்களை தொடர்ந்து நடிகர்  சீயான் விக்ரம் பேசியதாவது, நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன் அப்போதே செண்ட்ஜோசப் கல்லூரி பிடிக்கும் இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது.  உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது அதைத்தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி என்றார் இந்த நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரம் அவர்களின் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை பரிசாக அளித்தனர்.

68

இதை தொடர்ந்து நடிகர் விக்ரம் சில மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் மிகவும் சுவாரஸ்யமாக பதிலளித்தார். மிகவும்  டென்ஷனாக இருக்கும் போது ரசிகர்கள் தொல்லை செய்தால் அதை எப்படி சமாளிப்பீர்கள் என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விக்ரம், ஒரு போதும் எந்த ஒரு ரசிகரும் தொல்லை கொடுக்கிறார் என நினைத்தது இல்லை. ரசிகர்கள் அன்புக்காகத்தான் ஏங்குகிறோம். ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கடவுள் எங்களுக்கு கொடுத்த வரமாகத்தான் பார்க்கிறோம். என்னைப்பொறுத்த வரை அவர்கள்தான் எங்களை வாழவைக்கும் கடவுள் என உணர்ச்சிவசமாக பேசினார்.

மேலும் செய்திகள்: 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!
 

78

சினிமா துறையில் நீங்கள் பல கஷ்டங்களை கடந்து இப்போது சாதித்துள்ளீர்கள்...ஆனால் இப்போதைய இளைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை முடிவை எடுக்கிறார்களே இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு... பதிலளித்த விக்ரம், இந்தத்தலைமுறை அப்படி ஆகிவிட்டார்கள்.  கண்டிப்பாக ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்பது அவசியமானது தான் அதற்காக படிக்க வேண்டும் என ப்ரெஷரை ஏற்றிக்கொள்ளாதீர்கள், ஒவ்வொரு முறை விழும் போதும் நாம் எழுந்திருக்க வேண்டும். என்னால் நடக்கவே முடியாது. ஆனால் நான் நடக்க ஆரம்பித்து பின் நடிக்கவும் ஆரம்பித்தேன் என தன்னையே உதாரணமாக கூறினார். 

88

பொன்னியின் செல்வன் அப்டேட் கேட்டதற்கு... மிகவும் சிம்பிளாக, படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தப்படம் நிச்சயம் நாம் எல்லோரையும் பெருமைப்பட வைக்க கூடிய படம், நானும் இப்படத்தில் இருப்பது பெரிய பெருமை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories