ஸ்லிம் பிட் அழகியாக மாறிய வரலட்சுமி சரத்குமார்..! அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனியில் கவர்ச்சி அட்ராசிட்டி..!
நடிகை வரலட்சுமி கணிசமாக தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகிற்கு மாறியுள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான, 'போடா போடி' படத்தில் சிம்புக்கு ஜோடியாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டுகொள்ளப்படாத நடிகையாகவே இருந்தார்.
முதல் படத்திலேயே திறமையான நடிப்பு மற்றும் நடன ஆற்றலை வெளியப்படுத்திய இவரை, 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைத்தார் இயக்குனர் பாலா. இந்த படம் விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்தாலும், வரலட்சுமியின் நடிப்பு ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டுக்களை குவித்தது.
மேலும் செய்திகள்: 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!
இதை தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பை தாண்டி, அழுத்தமான குணச்சித்திர வேண்டங்களையும் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும், சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாகவும் நடித்து பிரமிக்க வைத்தார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி.
அதே நேரம் ஹீரோயினாக சில படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி், கலர்ஸ், யஷோதா என அரை டஜனுக்கு அதிகமான படங்கள் உள்ளன.
மேலும் செய்திகள்: சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!
சமீப காலமாக சற்று உடல் எடை கூடி காணப்பட்ட வரலட்சுமி தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து, ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ளார். அந்த வகையில்... பச்சை நிற குட்டை கவுன் அணிந்து அஞ்சலி பாப்பாவை போல் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.