திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

First Published Aug 23, 2022, 4:35 PM IST

கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.

Bharathiraja

16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த இயக்குனராக அறிமுகமாகியிருந்தவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்ட இவர் மண் வாசனை கலந்த படங்களை எடுத்து மனதை ஈர்த்தவர்.

ஆறு தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது என பல விருதுகளை தன் வாழ்நாளில் குவித்துள்ளார். பிரபல இயக்குனர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடம் இயக்கியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு....உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா

Bharathiraja

இவர் மூலம் திரைக்கு வந்த பல நடிகைகளும் முன்னணி நாயகிகளாக மிளிர்ந்து வந்தனர். மேலும்  பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை கவுரவித்து இருந்தது இந்திய அரசு. 2004 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருது, 2005 ஆம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் ஆப் லெட்டர்ஸ் கௌரவ பட்டம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்ட மணிமகுடங்களாகும்.

பாண்டியராஜன், ரஜினி, கமல் என முன்னணி நாயகர்களை கிராமத்து நாயகனாக மாற்றி மகிழ்ந்த பாரதிராஜாவின் பல படங்களும் இன்றும் நினைவில் என்று நீங்காதவை. கிழக்கே போகும் ரயில் மூலம் தான் ராதிகா அறிமுகம் ஆகிறார். அதேபோல கமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரசிகர்களின் பெரும் வரலாற்றை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு.... "இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி

Bharathiraja

சத்யராஜை வேறொரு கோணத்தில் காட்டிய படம் தான் அலைகள் ஓய்வதில்லை. முதல் மரியாதை என்னும் காதல் கீதத்தை கொடுத்து தேசிய விருதை தட்டிச் சென்ற இயக்குனரான பாரதிராஜா இறுதியாக 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மரியாதை என்னும் படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...கேரள பாரம்பரியத்திற்கு மாறிய அமலாபால்...சேலையில் ஜொலிக்கும் தேவதை

இயக்கத்தோடு நடிப்பிலும் ஆர்வம் காட்டி வந்த இவர் தொடர்ந்து பல படங்களில் தோன்றி வந்தார். அதன்படி சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நாயகனின் தந்தையாகவும், அதற்கடுத்தபடியாக ராக்கியில்  முக்கிய நாயகனாகவும், குற்றம் குற்றமே என்னும் படத்திலும், சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாகவும் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார் .

Bharathiraja

சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி வரவேற்பு பெற்றுள்ளவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வருகிறது. கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.

இந்நிலையில்  இவருக்கு திடீரென அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் உள்ள உள்ள மருத்துவமனைகள் பரிசோதனைக்காக பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனைகள் இருப்பார் என பாரதிராஜா தரப்பில் கூறப்படுகிறது.

click me!