உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா?

Published : Aug 23, 2022, 03:34 PM ISTUpdated : Aug 23, 2022, 05:25 PM IST

இன்று முதல் கோப்ரா படத்தை விளம்பரப்படுத்த விக்ரம் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை, கொச்சி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்.

PREV
15
உள்நாட்டு சுற்றுப்பயணத்தை துவங்கிய சீயான்..எதற்காக தெரியுமா?
cobra

சியான் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஸ்பைக் த்ரில்லர் படமான இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

25
cobra

மேலும் விக்ரமின் மிகப்பெரிய திரையரங்கு வெளியீடாக படம் இருக்கும் எனவும் பேசப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே இருப்பதால் இதன் ப்ரோமோஷன் வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு.... "இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி

35
cobra

அதன்படி படத்தின் விளம்பரத்திற்காக சியான் விக்ரம் உள்நாட்டு பயணத்தை துவங்கி உள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விக்ரமின் முதல் திரை வெளியீடான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு சுவாரசியமான உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாம்.

மேலும் செய்திகளுக்கு...கேரள பாரம்பரியத்திற்கு மாறிய அமலாபால்...சேலையில் ஜொலிக்கும் தேவதை

45
cobra

இந்நிலையில் இன்று முதல் கோப்ரா படத்தை விளம்பரப்படுத்த விக்ரம் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை, கொச்சி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். நாயகன் மற்றும் குழுவினரின் பாசிட்டிவ் அப்ரோச் கோபுர படத்திற்கான எதிர்பார்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும். 

மேலும் செய்திகள்: 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!

மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சியான் விக்ரம் பல தோற்றங்களில் காணப்படுவார். மேலும் இந்த படத்தை உருவாக்க 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இயக்குனர் பல சுவாரஸ்யங்களை  வைத்திருப்பார் என தோன்றுகிறது.

55
cobra

கோப்ரா படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள  விழாவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories