"இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி

Published : Aug 23, 2022, 02:46 PM ISTUpdated : Aug 23, 2022, 02:51 PM IST

நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்'' என லிங்குசாமி கூறியுள்ளார்.

PREV
14
"இது எங்கள் பிரச்சனை "சிறை தண்டனை குறித்து  தடாலடி அறிக்கை விட்ட லிங்குசாமி
Director Lingusamy

கமர்சியல் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி பெயரை பெற்றிருந்தவர் பிரபல இயக்குனர் லிங்கசாமி. இவருக்கு சமீபத்தில் ஆறு மாத சிறிதண்டனை விதிக்கப்பட்டு இருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிவிபி தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை இயக்குனர் திருப்பி தராததால் அவரை மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.

24
Director Lingusamy

பிவிபி நிறுவனத்திடம் கடன் வாங்கிய தொகைக்காக காசோலை ஒப்படைத்துள்ளது. ஆனால் இயக்குனர் ஒப்படைத்த செக் பணம் இன்றி பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் தான வழக்கு தொடர்ந்தாக கூறப்படுகிறது. இந்த வழக்கை அமர்வு நீதிமன்றம்  நேற்று விசாரணைக்கு கொண்டு வந்தது. 

மேலும் செய்திகளுக்கு...கேரள பாரம்பரியத்திற்கு மாறிய அமலாபால்...சேலையில் ஜொலிக்கும் தேவதை

34
Director Lingusamy

வழக்கு விசாரணையின் முடிவில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திராவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.  இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய லிங்குசாமி முடிவு எடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்: 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!
இது குறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில் 'இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்'' என கூறியுள்ளார்.

44
Director Lingusamy

முன்னதாக ஆனந்தம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் சண்டைக்கோழி, அஞ்சான், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.   சமீபத்தில் தெலுங்கு நாயகன் ராம் பொத்தினேனி நடித்ததி வாரியார் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் புல்லட் பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்புகளை பெறவில்லை.

மேலும் செய்திகள்: சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!

Read more Photos on
click me!

Recommended Stories