இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி உள்ளார். தமிழில் இவர் நடித்த முதல் படம் விருமன். முத்தையா இயக்கிய இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. முதல் படத்திலேயே அதிதியின் நடிப்புக்கும், டான்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதுமட்டுமின்றி இப்படத்தில் மதுர வீரன் என்கிற பாடலையும் யுவனுடன் சேர்ந்து பாடி இருந்தார் அதிதி.
24
முதல் படத்திலேயே இவருக்கான ரசிகர் கூட்டமும் பெரிதானது. விருமன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. இப்படம் வெளியாகி 2 வாரங்கள் ஆக உள்ள நிலையில், ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியும் சமீபத்தில் படக்குழு கொண்டாடியது. மகளின் முதல் படமே ஹிட் ஆனதால் ஷங்கரும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.
விருமன் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி அடுத்ததாக மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
44
இந்நிலையில், சோசியல் மீடியாவில் அதிதியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் 10-ம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கிலத்தில் 91, பிரெஞ்சு பாடத்தில் 97, கணிதத்தில் 97, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 91 என மொத்தம் 475 மதிப்பெண்களை எடுத்து பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி இருக்கிறாராம். இவ்வாறு படிப்பில் சிறந்து விளங்கிய அதிதி மருத்துவ படிப்பு முடித்து பட்டமும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.