நடிகர் விக்ரம் மஹான் படத்தை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய இரு படங்களில் நடித்த முடித்துள்ளார். இந்த இரு படங்களின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதில் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
cobra new poster
இந்த படத்தின் புதிய தகவலாக இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த படம் ஓடும் நேரத்தை கொண்டுள்ளதாகவும் அதாவது ஸ்பை த்ரில்லரான இது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...உள்ளாடை போன்ற மேலாடை அணிந்து பிந்து மாதவி கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது
சியான் விக்ரம் சமீபத்திய படமான கோப்ரா பல ஆண்டுகளுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது. அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் பல தோற்றத்தில் விக்ரம் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் நடிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
cobra
விநாயகர் சதுர்த்திக்கு கோப்ரா வெளியாக உள்ளதால் இது நடிகரின் திருவிழா வெளியிடாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி நாயகியாக நடிக்கிறார். இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், மீனாட்சி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...ராமன் தேடிய சீதா வேடத்தில் தர்ஷா குப்தா..கிளாமர் போஸால் கடுப்பான நெட்டிசன்கள்
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் சமீபத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்பட்டது. உடல்நிலை கோளாறு காரணமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டிற்கு வராத விக்ரமை கோப்ரா இசை வெளியிட்டில் கண்ட ரசிகர்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்து போனார்கள்.
ponniyin selvan 1
மேலும் விக்ரம் நடித்தில்லை பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது சிங்குளாக சோழ சோழா பாடல் வெளியாகியிருந்தது. விக்ரம் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் இடம் பெரும் இந்த பாடல் ஹைதராபாத்தில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழா மூலம் வெளியிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...அட..சேலைக்கு மாறிட்டாரே..ஆனாலும் கிளாமர் குறையலையே..சாக்ஷியின் லேட்டஸ்ட்