தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.