அட..சேலைக்கு மாறிட்டாரே..ஆனாலும் கிளாமர் குறையலையே..சாக்ஷியின் லேட்டஸ்ட்
ஸ்லீவ்லெஸ் காட்டன் பிளவுஸ் உடன் இடுப்பில் மெல்லிய ஒட்டியானம் அணிந்து சாக்ஷி அகர்வால் கொடுத்துள்ள பால்கனி போஸ்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளது.
Sakshi Agarwal
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மற்றும் ஒரு நடிகை தான் சாக்ஷி அகர்வால். முன்னதாகவே திரை உலகில் இவர் தோன்றியிருந்தாலும் பிக் பாஸ் ஷோ இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அந்த ஷோவில் கவின் மீது காதல் கொண்ட சாக்ஷ அகர்வாலின் செயல்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தது.
Sakshi Agarwal
முதலில் கவினுக்கும் அது ஓகேவாகத்தான் இருந்தது. பின்னர் லாஸ்லியாவின் மீது அவரது கவனம் திரும்பியது. இதை தொடர்ந்து கவின் மீது வெறுப்போடு சுற்றி வந்த சாக்ஷி பின்னர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் வெளியேறி விட்டார்.
மேலும் செய்திகளுக்கு...விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!
Sakshi Agarwal
பிக்பாஸுக்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. கடந்தாண்டு மட்டும் இவர் நடிப்பில் சுமார் நான்கு படங்கள் வெளியாகி இருந்தது. சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியுடன் தோன்றிய இவரின் நடிப்பு பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...சிம்புவின் கொரோனா குமாரை கைவிட்டு...ஆர்.ஜே பாலாஜியுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்..
Sakshi Agarwal
தற்போது சுமார் 9 படங்களில் இவர் கைவசம் வைத்துள்ளார். தொடர்ந்து வெளியாக உள்ள இவரது நடிப்பில் வரும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், சிறப்பு தோற்றங்களிலும். தோன்றுகிறார் சாக்ஷி அகர்வால்.
மேலும் செய்திகளுக்கு...அட... இவர்தான் எஸ்பிபி - யின் மகளா? வைரலாகும் புகைப்படம் இதோ...
Sakshi Agarwal
முன்னதாக ஐடி துறையில் இருந்து மாடலிங் பணிக்கு திரும்பிய இவர் ராஜா ராணி, படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அதை அடுத்து யோகம், திருட்டு விசிடி போன்ற படங்களில் சிறுசிறு ரோல்களில் நடித்து வந்தார்.
Sakshi Agarwal
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் தான் இவருக்கு முகவரி கிடைத்தது என கூறலாம். அதில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் சாக்ஷி.
Sakshi Agarwal
இதற்கிடையே அவ்வப்போது விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களின் லைக்குகளை பெற்று வரும் சாக்ஷி, பிகினி முதல் புடவை வரை பல்வேறு உடைகளில் கலக்கி வருகிறார். அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் காட்டன் பிளவுஸ் உடன் இடுப்பில் மெல்லிய ஒட்டியானம் அணிந்து இவர் கொடுத்துள்ள பால்கனி போஸ்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளது.