ஏற்கனவே நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகாவை நடிக்க வைக்க, சில டோலிவுட் இயக்குனர்கள் அணுகியதாக, கூறப்பட்ட நிலையில், தன்னுடைய மகளை நடிகையாக்க வைக்க ரோஜா - செல்வமணி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
25
இந்நிலையில் இவர் தற்போது, அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஆகியவை பற்றி படித்து வருவதாகவும்... படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் நடிப்பில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
நடிகை ரோஜா ஒரு நடிகை என்பதாலும், அவரது தந்தை செல்வமணி ஒரு இயக்குனர் என்பதாலும்... தன்னுடைய மகளுக்கு சீக்ரட்டாக ரோஜா நடிப்பு பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொடுத்து வருவதாகவும், அதே போல் அவரது தந்தை செல்வமணியும், திரைக்கதை எழுதுதல், மற்றும் படம் இயக்குவது குறித்து கற்பித்து வருகிறாராம்.
45
ஏற்கனவே அன்ஷுமாலிகா எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை இவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படிப்பிலும் படு சுட்டியாக இருக்கும் அன்ஷுமாலிகா பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகினால் ... திறமையான நடிகையாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ரோஜா - செல்வமணி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.