சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்... இதில் திரையிட தேர்வான 15 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?

Published : Dec 15, 2022, 01:40 PM IST

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வருகிற டிசம்பர் 22-ந் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 

PREV
14
சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்... இதில் திரையிட தேர்வான 15 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?

சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள துவக்க விழாவில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் பங்கேற்று திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார்.

24

வருகிற டிசம்பர் 22-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சத்யம் திரையரங்கில் உள்ள 4 ஸ்கிரீன்களிலும், அண்ணா திரையரங்கிலும் இந்த திரைப்பட விழாவுக்கு தேர்வான படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான சில படங்களும் இந்த விழாவில் திரையிட தேர்வாகி உள்ளன.

இதையும் படியுங்கள்... பிரியா பவானி ஷங்கர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை'... 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் பிரபலம் அதிர்ச்சி மரணம்!

34

ஒவ்வொரு ஆண்டும் 12 தமிழ் திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இரவின் நிழல், கார்கி, ஓ2, நட்சத்திரம் நகர்கிறது, ஆதார், மாமனிதன், கசடதபற, பஃபூன், இறுதிப்பக்கம், பிகினிங், யுத்த காண்டம், கோட் ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் தான் இந்த ஆண்டு திரையிட தேர்வாகி உள்ளன.

44

இதுதவிர இந்தியன் பனோரமா பிரிவிலும் ஒவ்வொரு ஆண்டும் 15 இந்திய படங்கள் தேர்வு செய்யப்படும். அதில் மாலைநேர மல்லிப்பூ, கடைசி விவசாயி மற்றும் போத்தனூர் தபால் நிலையம் ஆகிய 3 தமிழ் படங்கள் தேர்வாகி உள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டு சென்னை திரைப்பட விழாவில் மொத்தம் 15 தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்... Watch : கடப்பா தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் & ரஜினி சிறப்பு வழிபாடு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories