
மதராஸ் டு பாண்டிச்சேரி:
1966 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் மதராஸ் டு பாண்டிச்சேரி. திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கல்பனா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப் படத்திற்கு உசிலை சோமநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். அந்த காலத்தில் வெளியாகி இந்த திரைப்படம் வியாபார ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இப் படம்இந்தியில் 'பாம்பே டு கோவா என (1972) ஆண்டு ரீமேக் செய்தனர். 2004இல் மராத்தி மொழியில் "நவ்ரா மழ நவ்சச்சா" என்கிற பெயரிலும், 2007இல் கன்னடம் மொழியில் "ஏகதந்தா" என்கிற பெயரிலும் இப்படம் ரீமேக் செய்து வெளியாகி வெற்றி வாகை சூடியது.
மதராசபட்டினம்:
பழைய சென்னையை கண் முன் நிறுத்திய திரைப்படம் தான் மதராசபட்டினம். 2010ல் வெளியான இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாகவும், எமி ஜாக்சன் நாயகியாகவும் நடித்திருந்தார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் இயக்கி இருந்தார். மேலும் நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் கதை படி, இந்தியா சுதந்திரம் பெறும் சமயத்தில் சென்னை ஆளுநராக இருந்தவரின் மகளாக இருக்கும் ஏமி ஜாக்சன். எதேர்ச்சியாக ஆர்யா ஒரு கழுதைக்குட்டியைக் காப்பாற்றுவதைக் பார்க்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, எமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவை தேடி இந்தியா வரும் எமி அவரை காண்கிறாரா? இல்லையா... ஆர்யா பற்றி தெரிந்து கொள்கிறாரா என்பதை மிக சுவாரஸ்யமாக எடுத்திருந்தார் இயக்குனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
மேலும் செய்திகள்: விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!
சென்னையில் ஒரு நாள்:
2013ஆம் ஆண்டு, சகீத் காதர் இயக்கத்தில், வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'டிராபிக்' படத்தின் ரீமேக்காக இந்த படம் வெளியானது. இந்த படத்தை, நடிகை ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரித்திருந்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி மேனன் மற்றும் இனியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டு இப்படம் வெளியானது. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே இந்தபடம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமைந்தது.
மெட்ராஸ்:
2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'மெட்ராஸ்' திரைப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக காத்ரீன் தெரேசா நடித்திருந்தனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து விநியோகம் செய்திருந்தது. ஒரு சுவருக்காக இரண்டு தரப்பினர் மத்தியில் நடிக்கும் பிரச்சனை தான் இந்த படம். எளிமையான கதை என்றாலும், ஆழமான கருத்துக்கள் இந்த படத்தில் அடங்கி இருந்தது. இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை 600028
2007 இல் வெளியான சென்னை 600028 திரைபடடம், காமெடி மற்றும் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். எஸ். பி. பி. சரண், மற்றும் ஜே.கே. சரவணா ஆகியோர் தயாரித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இந்த படத்திற்கு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: Breaking: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை! நீதிமன்றம் அதிரடி..!
சென்னை காதல்:
கடந்த 2006 ஆம் ஆண்டு, பரத், ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'சென்னை காதல்'. தாதாவின் மகளான, ஜெனிலியாவுக்கும், பரத்துக்கும் காதல் ஏற்படுகிறது. இருவரும் சேர்ந்து ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள். ஜெனிலியாவின் தந்தை அவர்களை தேடி பிடித்து பிரித்து விடுகிறார். பின்னர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஜெனிலியாவை கண்டு பிடித்து, வாழ்க்கையில் இருவரும் ஒன்று சேர்கிறார்களா? இல்லையா என்பதே மீதி கதை. தலைநகரின் பெயரிலேயே வெளியான இந்த காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
சென்னை 2 சிங்கப்பூர்:
2017 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் சென்னை 2 சிங்கப்பூர். அப்பாஸ் அக்பர் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன், சிவ் கேசவ், எம்சீ ஜெஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தை ஜிப்ரான், வ்ரோபல் மற்றும் எம் எம் 2 நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஊடக முன்னேற்ற ஆனையமும் தயாரித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் தமிழகத் திரைப்படத்துறை ஆகிய இரு திரைப்படத்துறைகளும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரிவது இதுவே முதல்முறை ஆகும்.
இந்தக் கதையின் நாயகன் ஹரிஷ் எப்படியாவது இயக்குநர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். அப்போது தனது கனவுப் படத்திற்கு முதலீடு செய்பவர்களைத் தேடி சிங்கப்பூர் செல்கிறார். ஆனால் அவனுடைய தொடர் துரதிருஷ்டத்தினால் அந்தக் காரியங்கள் கைகூடவில்லை. இதன் பின்னர் தன்னுடைய பாஸ்போட்டை துளைத்து விட்டு, அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த படத்தின் கதை.
வட சென்னை:
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'வடசென்னை'. இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டும் இன்றி, ஆண்ட்ரியாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்: சினிமா தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் மத்தியில்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டுக்கள்
வணக்கம் சென்னை:
2013இல் வெளியான நகைச்சுவைத திரைப்படம் வணக்கம் சென்னை. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. ஆவதே இந்த படத்திற்கு கதை எழுதி, இயக்கிய இந்த படத்தை அவரது கணவர் உதயநிதி தயாரித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்திருந்தார்.
தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையனும், தென்னிந்தியக் கலாசாரத்தை புகைப்படம் எடுக்க வரும் லண்டன் வாழ் இந்தியப் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் சண்டை ப்ளஸ் காதல் ஸ்பாட் தான் 'வணக்கம் சென்னை’. சென்னைக்கு வரும் சாஃப்ட்வேர் துறை இளைஞன் சிவாவுக்கும், லண்டனில் இருந்து வரும் ப்ரியா ஆனந்துக்கும் ஒரே ஃப்ளாட்டை ஏமாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார் போலி ஹவுஸ் ஓனர் சந்தானம். ப்ரியா ஆனந்த், ஏற்கனவே லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். மோதல் கடைசியில் காதலாக மாற, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதை கலகலப்பாகச் இயக்கி இருந்தார் கிருத்திகா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
சென்னை எக்ஸ்பிரஸ்:
2013ம் ஆண்டு வெளியான தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப்படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் ஷாருகான் ராகுல் என்கிற கதாபத்திரத்திலும், தீபிகா படுகோன் மீனலோச்சனி அழகுசுந்தரம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். தன்னுடைய தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற, ராமேஸ்வரத்தில் அவரது அஸ்தியை கரைக்க சென்னை வந்து பின்னர் ராமேஸ்வரம் செல்வதாக கூறி, நண்பர்களுடன் கோவாவுக்கு செல்ல ரூட்டு போடும் நாயகன், எப்படி தீபிகாவை சந்திக்கிறார்? இருவருக்கும் இடையே காதல் வந்து எப்படி திருமணத்தில் முடிகிறது. இதற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ். ரோஹித் ஷெட்டி இயக்கிய இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தயாரித்திருந்தார்.