ஆள விடுங்கடா சாமி... அந்த ‘விஜய்’ நடிகருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன்... ஓப்பனாக சொன்ன சாய் பல்லவி

Published : Aug 22, 2022, 03:39 PM IST

Sai Pallavi : தமிழில் தனுஷின் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

PREV
14
ஆள விடுங்கடா சாமி... அந்த ‘விஜய்’ நடிகருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன்... ஓப்பனாக சொன்ன சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நயன்தாராவுக்கு அடுத்தபடியாக லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது சாய் பல்லவி தான் என சொல்லும் அளவுக்கு தனது படங்களால் அனைவரையும் வசீகரித்து வருகிறார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் இவர் நடித்த கார்கி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

24

குறிப்பாக டோலிவுட்டில் இவர் படு பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அங்கு இவர் நடிக்கும் படங்களெல்லாம் சக்கைபோடு போடுகின்றன. இதனால் இவரது படங்களுக்கென தனி மவுசு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ள சாய்பல்லவி, விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் உடனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அப்ரூவர் ஆன ராதாரவி.. இந்த ஒரு படம் தான் ஓடுது..! இவர் தான் Born ஆக்டர்! மேடையில் புகழாரம்!

34

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா உடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதைகளையும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

44

விஜய் தேவரகொண்டா பற்றி அவர் இப்படி சொல்ல மற்றுமொரு முக்கிய காரணமும் இருக்கிறதாம். அது என்னவென்றால், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் முதலில் சாய் பல்லவி தான் நாயகியாக நடிக்க இருந்தாராம். பின்னர் அப்படத்தில் அதிகளவில் முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறி அவர் விலகியதால் அவருக்கு பதில் ராஷ்மிகா நடித்தார். அதன்பின்னரே அவர் விஜய் தேவரகொண்டாவுடன் எந்த படத்திலும் நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக டோலிவுட் வாட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... கிளாமர் லுக்கிற்கு பழகும் சூர்யா பட நாயகி அபர்ணா பாலமுரளி..க்யூட் போட்டோஸ் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories