மலைபோல் நம்பி இருந்த 2 AK-களின் படங்களும் பிளாப் ஆனதால் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் - பரிதாப நிலையில் பாலிவுட்

First Published Aug 22, 2022, 3:07 PM IST

பாலிவுட்டின் AK-களான அமீர்கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா மற்றும் ரக்‌ஷா பந்தன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன.

பாலிவுட் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான வசூல் ஈட்டும் திரையுலகம் என்றால் அது பாலிவுட் தான் என்கிற நிலைமை இந்த ஆண்டு அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. அங்கு இந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும்பாலானவை மிகப்பெரிய அளவில் பிளாப் படங்களாகவே அமைந்தன.

இந்த நிலைமை இந்த மாதம் மாறிவிடும் என பாலிவுட் திரையுலகினர் பெரிதும் நம்பி இருந்தனர். ஏனெனில் பிரபல பாலிவுட் நடிகர்களான அக்‌ஷய் குமார் நடித்த ரக்‌ஷா பந்தன் மற்றும் அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகின. அந்த படங்கள் ரிலீசான சமயத்தில் தொடர் விடுமுறையும் விடப்பட்டு இருந்ததால், இப்படத்தை பெரிதும் நம்பி இருந்தனர்.

ஆனால் இப்படத்தின் ரிலீசுக்கு பின் அவர்கள் நினைத்தது படி எதுவும் நடக்கவில்லை. இரண்டு நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தும் இந்த 2 படங்களும் தோல்வியை தழுவின. தென்னிந்திய படங்கள் ரிலீசான ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டத் தொடங்கியுள்ள இந்த சமயத்தில் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் அந்த வசூலை எட்ட 10 நாட்களுக்கு மேல் ஆனது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சில இடங்களில் இப்படத்திற்கு 2 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என கூவி கூவி விற்றும் கூட்ட வரவில்லை என்கிற நிலை தான் உள்ளது.

இதையும் படியுங்கள்... சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆடியோ லான்சுக்கு தயாராகும் பிரம்மாண்ட செட்- இதன் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா

அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் தற்போது வரை ரூ.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இதன் வசூல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால் இப்படம் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மறுபுறம் அக்‌ஷய் குமார் நடித்த ரக்‌ஷ பந்தன் திரைப்படம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படமும் ரிலீசாகி 10 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், ரூ.48 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் இப்படமும் நஷ்டம் அடைவதற்கு அதிக அளவில் சான்ஸ் இருப்பதாக தெரிகிறது. தற்போதைய சூழலில் தென்னிந்திய படங்களுக்கு பாலிவுட்டில் மவுசு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Breaking: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை! நீதிமன்றம் அதிரடி..!

click me!