சினிமா தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் மத்தியில்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டுக்கள்

First Published Aug 22, 2022, 2:03 PM IST

நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சினிமா தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்ட உள்ளதாக அறிவித்ததை அடுத்து, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
 

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய 67 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, தற்போது சிரஞ்சீவி, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் 'லூசிபர்' படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு வரும் 'காட்ஃபாதர்' படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
 

மேலும் நடிகை நயன்தாரா, சத்யதேவ், பூரி ஜெகநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு,  ஏழை சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி, அதிரடி முடிவு எடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. மறைந்த தன்னுடைய தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் பெயரில் மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!
 

இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில்...  "இன்று நான் திரையுலகில் லட்சக்கணத்தில் பணம் சம்பாதிப்பதற்கு முக்கிய காரணம் சினிமா தொழிலாளர்கள் தான். எனவே அவர்களின் நலனுக்காக நான் ஏதேனும் செய்ய வேண்டும். எனவே தான் எத்தனை கோடி செலவு ஆனாலும், இந்த மருத்துவமனையை கட்ட முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவியின் இந்த அறிவிப்புக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  தெலுங்கு திரைப்பட கிரிக்கெட் சங்கம் ரூபாய் 20 லட்சம் பணத்தை சிரஞ்சீவி கட்டும் மருத்துவமனை செலவிற்கு முன் வந்துள்ளது. அதேபோல் பிரபல இசையமைப்பாளர் தமன் இசை நிகழ்ச்சி மூலம் பணம் திரட்டி, அதனை மருத்துவமனை செலவிற்கு வழங்க உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: சூர்யா, ஜோதிகா, தனுஷ், போன்ற நடிகர்கள் கலந்து கொண்ட ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி.! வைரலாகும் போட்டோஸ்!
 

சிரஞ்சீவி கட்டப் போகும் இந்த மருத்துவமனையில் ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. பொதுவாக பல முன்னணி நடிகர்கள் கூட, சினிமா தொழிலாளர்களை கண்டுகொள்ளாத நிலையில், சிரஞ்சீவியின் இந்த முடிவு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. மேலும் ஆளுநர் தமிழிசையும் மற்றும் நடிகர்களும் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி நடிப்பு தவிர்த்து சமூக சேவையிலும் அதிக அக்கறை கொண்டவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல இடங்களில் ரத்தவங்கி நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றுவதற்கென்றே தனி குழுவை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: 60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!
 

click me!