Thiruchitrambalam : மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் மித்ரன் ஆர் ஜவகர். கடந்த சில ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷுடன் இணைந்த படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் கதையை தனுஷ் எழுத, மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி இருந்தார்.
24
இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இதுதவிர தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜும், தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். வரிசையாக தொடர்ந்து 3 படங்கள் பிளாப் ஆனதால் கவலையில் இருந்த தனுஷுக்கு இப்படத்தின் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது.
திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. அதன்படி இப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் தனுஷின் கெரியரில் அதிவேகமாக 50 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
44
இதற்கு முன் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை 10 நாட்களில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.