இதற்கிடையே பிரபல பிவிஆர் சினிமாஸ் லால்சிங் சத்தா மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய இரு திரைப்படங்களுக்கும் பல சலுகைகளை கொடுத்தும் போதுமான வசூலை பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 31 இலவச டிக்கெட்டுகளை சலுகையாக அறிவித்திருந்தது பிவிஆர் சினிமாஸ்.
ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 24 வரை குறைந்தபட்சம் 4 டிக்கெட்டுகளை வாங்கினால், நான்காவது டிக்கெட்டில் அதிகபட்ச தள்ளுபடி ரூபாய் 200 என அறிவித்திருந்தது. அதாவது மூன்று டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்பதை போல. இருந்தும் இந்த ஆஃபர் போதுமான வரவேற்பை பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பால் வசூலில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லையாம்.