சின்னத்திரையில் நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட்டை, பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி தொடர்' தான். இந்த தொடரில் போஸ் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில், பின்னர் அதுவே இவருக்கு அடையாளமாக மாற ரசிகர்களால் போஸ் வெங்கட் என்று அழைக்கப்பட்டார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நடிகை சோனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னருமே இருவருமே திரைப்படங்களில் குணச்சித்திர வேதத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் போஸ் வெங்கட் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான, 'கன்னி மாடம்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
எங்க குழந்தைக்கு பேரு தேர்வு செஞ்சாச்சு! பெயர் சூட்டு விழா பற்றி அறிவித்த ராம் சரண் - உபாசனா ஜோடி!
இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. நடிப்பு, இயக்கம், என்பதை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் போஸ் வெங்கட் தற்போது திமுக கட்சியின் பேச்சாளராக உள்ளார். மேலும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இவருடைய வீட்டில் அடுத்தடுத்து நடந்துள்ள இரண்டு மரண சம்பவங்கள் ஒட்டு மொத்த குறும்பத்தினரையே உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இந்த சோகத்தில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள் போஸ் வெங்கட்டின் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் இரண்டு பேரை பறிகொடுத்துவிட்டு, போஸ் வெங்கட்டின் குடும்பமே கண்ணீரில் மூழ்கியுள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு ஆறுதல் கூறிவருவதோடு, இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
அஜித் - ஷாலினி முதல் கௌதம் - மஞ்சிமா வரை ரீல் ஜோடியாக நடித்து.. ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள்!