குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர்.
டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹா, டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி, தேஜஸ்வினி உள்ளிட்ட சிறந்த சிகிச்சையை வழங்கிய மருத்துவ குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆதரவினை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது என கூறினார்.
என் மகளுக்கு அவள் பிறந்த தேதியிலிருந்து நாட்கள் கழித்து பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம். அவளுக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அது என்ன பெயர் என்பதனை விரைவில் உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்.
எங்களுடைய குட்டி தேவதை வீட்டிற்கு வருகை தந்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். இந்த தருணத்தில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனது மகளைப் பற்றி மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மனமுவந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!