தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. முதல் முதலில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது குஷ்புவுக்கு தான். தென்னிந்திய மொழி முன்னணி ஹீரோக்களான, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.