ஒருத்தன் லெட்டர் போட்டான்... இன்னொருத்தன் புருஷன்னு சொல்லி வீட்டுக்கே வந்துட்டான் - ஷாக்கான கீர்த்தி சுரேஷ்

First Published | Jun 23, 2023, 4:40 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷின் புருஷன் எனக்கூறி அவரது வீட்டிற்கே சென்ற நபர் ஒருவர் அவரை உதயநிதி உடன் நடிக்கக் கூடாது என சொன்னாராம்.

keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் கீர்த்தி, அந்த வகையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் பற்றியும், தனக்கு வந்த புரபோசல்கள் பற்றியில் மனம்திறந்து பேசி இருக்கிறார்.

keerthy suresh

முதலில் திருமணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், அது போன்ற செய்திகள் முதலில் பார்க்கும் போது காமெடியாக இருந்தாலும் இடையே சற்று சீரியஸ் ஆன விஷயமாக மாறியது. சமீபத்தில் கூட என்னுடைய நண்பர் ஒருவருடன் போட்டோ போட்டிருந்தேன், அவரை தான் கல்யாணம் பண்ண போறேன்னு கிளப்பி விட்டுட்டாங்க. பாவம் அவனோட லவ்வர் டென்ஷன் ஆகிட்டா. 


keerthy suresh

அதேமாதிரி எனக்கு ஒருத்தர் தொடர்ந்து லவ் லெட்டர் போட்டுக்கிட்டே இருந்தாரு. என்ன கல்யாணம் பண்ணனும்னு அதுல எழுதிருந்தாரு. அதுல அவரோட பெயர் அட்ரஸ் எல்லாமே இருக்கும். பதிலுக்கு அவரும் என்னிடம் இருந்து ரிப்ளை எதிர்பார்ப்பார். ஆனால் நான் பதில் கடிதம் எதுவும் அனுப்பவில்லை.

இதையும் படியுங்கள்... பப்ளி பேபியாக இருந்த ஹன்சிகா... ஆபரேஷன் செய்து தான் சட்டென உடல் எடையை குறைத்தாரா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

keerthy suresh

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒருத்தர் என் வீடு தேடியே வந்துட்டார். அவரு பார்க்க வேற மாதிரி இருந்தாரு. அப்போ நான் வீட்ல இல்லை, வீட்ல வேலை செய்றவங்க தான் இருந்தாங்க. அவங்ககிட்ட போய், அவ ஏன் இந்த படம்லாம் பண்றானு பேசிருக்காரு. நான் ஏதோ அவர் பொண்டாட்டிங்கிற மாதிரியே பேசிருக்காரு. 

keerthy suresh

அதே ஆளு கேரளாவுல இருக்கிற என் அம்மா வீட்டுக்கெல்லாம் போயி, அங்க கிட்ட பேச முயற்சித்திருந்தார். அவர் சென்னையில என் வீட்ல வேலை செய்யுறவங்க கிட்ட பேசும்போது எதுக்கு உதயநிதி கூடலாம் படம் பண்றானு கேட்டாராம். இதையெல்லாம் கேட்டப்போ, டேய் யார்ரா நீனு தோணுச்சு. அப்புறம் உதயநிதி கிட்டயே இதை சொன்னேன்.

keerthy suresh

அதேபோல் வீட்டில் அம்மா, பாட்டி இருக்கும்போது ஒரு அம்மா, அவரது பையனோடு வந்திருக்காங்க. அப்போ என் பாட்டி தான் அவங்கள கூப்பிட்டு உக்கார வச்சு பேசிட்டு, என் அம்மாவை வர சொல்லிருக்காங்க. என் அம்மா வந்ததும் அவர்கள் கல்யாணம் பற்றி பேசினாங்களாம். உடனே ஷாக் ஆகிப்போய், என் பாட்டியிடம் யாருன்னு தெரியாம எதுக்கு உள்ள விட்ட், அவங்க பொண்ணு கேட்டு வந்திருக்காங்கனு சொல்லிருக்காங்க இந்த மாதிரி விஷயமெல்லாம் அவ்வப்போது நடக்கும் என கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!

Latest Videos

click me!