ஓடிடி ரிலீசுக்கு ரெடியான பைசன்... தியேட்டரில் அள்ளிய லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 12, 2025, 02:42 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சக்கைப்போடு போட்ட பைசன் காளமாடன் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

PREV
14
Bison OTT Release date

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த படம் 'பைசன்'. அக்டோபர் 17ந் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் தேசிய கபடி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. கபடி போட்டியின் பின்னணியில் உள்ள சாதிய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது. இப்படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பா இரஞ்சித் தயாரித்து இருந்தார்.

24
ஹிட்டான பைசன் காளமாடன்

பைசன் காளமாடன் திரைப்படத்திற்காக நிஜ கபடி வீரராகவே மாறும் அளவிற்கு டிரெயினிங் எடுத்து நடித்திருந்தார் துருவ் விக்ரம். அவரின் கெரியரில் அவருக்கு முதல் வெற்றியை கொடுத்த படம் பைசன் தான். இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். அவரின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.

34
பைசன் பட வசூல் நிலவரம்

தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படம், உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.52 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இப்படம் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களில் தயாரிப்பாளருக்கு அதிகளவில் லாபத்தை அள்ளித் தந்த படமாக பைசன் மாறி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.

44
பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி

அதன்படி 'பைசன்' திரைப்படம் வருகிற நவம்பர் 21ந் தேதி முதல் ஓடிடி-யில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு போட்டியாக வெளிவந்த டியூட் திரைப்படம் நவம்பர் 14-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருக்கிறது. அதனால் டியூட் வெளியான மறுவாரம் பைசன் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்து உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories