நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படங்களுக்கு இடையேயான மோதல் தற்போதே தொடங்கி இருக்கிறது.
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அப்போது ரிலீஸ் ஆக உள்ள படங்களுக்காக மோதல் தற்போதே தொடங்கி இருக்கிறது. பொங்கல் ரேஸில் முதல் ஆளாக களத்தில் குதித்த படம் விஜய்யின் ஜன நாயகன் தான். அப்படம் வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதனுடம் போட்டி போட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய உள்ளனர். அப்படம் ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
24
விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன்
ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் ஜனநாயகன் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான தளபதி கச்சேரி என்கிற பாடல் வெளியிடப்பட்டது. அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் வியூஸையும் அள்ளி உள்ளது.
34
சிவகார்த்திகேயனின் பராசக்தி
விஜய்க்கு போட்டியாக பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் களமிறங்கி உள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் அதர்வா முரளி, ரவி மோகன், பேசில் ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான அடி அலையே என்கிற பாட்டு அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்டது.
அப்பாடல் வெளியாகி 5 நாட்கள் ஆகும் நிலையில், அதற்கு 15 மில்லியன் வியூஸ் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால் 3 நாட்களுக்கு முன் வெளியான தளபதி கச்சேரி பாடல் 35 மில்லியன் பார்வைகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. இதனை சீண்டும் விதமாக பராசக்தி படக்குழு ஒரு ட்வீட்டை போட்டுள்ளது. அதன்படி அடி அலையே பாடல் 15 மில்லியன் ஆர்கானிக் வியூஸ் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் ஆர்கானிக் என்கிற வார்த்தையை ஹைலைட் செய்துள்ளனர். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அப்போ தளபதி கச்சேரி பாடல் ஆர்கானிக் வியூஸ் பெறவில்லை என்று குத்திக்காட்டுகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இடையே எக்ஸ் தளத்தில் கடும் மோதல் வெடித்துள்ளது.