தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிலையில், அவர் முதல் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட பிரபலங்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவர் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னர் எந்த ஒரு இயக்குனரிடமும் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை. வங்கியில் வேலைபார்த்து வந்த லோகி, குறும்படங்கள் இயக்கி, அதன்மூலம் கவனம் பெற்று சினிமாவுக்குள் நுழைந்தார். முதல் படமே வெற்றியடைந்ததை அடுத்து, நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்கிற திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ். அப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் வலைவீச தொடங்கினர்.
24
லோகேஷ் கனகராஜ் திரைப்பயணம்
அதில் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்க கமிட் ஆனார் லோகி. அப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடியது. பின்னர் கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜய்யின் லியோ, ரஜினியை வைத்து கூலி என தொடர்ந்து மூன்று பிரம்மாண்ட படங்களை இயக்கி பான் இந்தியா அளவில் பிரபலம் ஆனார் லோகேஷ். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கூலி படம் மட்டும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. அதனால் அவர் அடுத்தடுத்து இயக்க இருந்த படங்கள் அவர் கைநழுவி சென்றன.
34
ஹீரோவாக அறிமுகமான லோகேஷ் கனகராஜ்
இதனால் இயக்கத்திற்கு ரெஸ்ட் விட்டு, ஹீரோவாக களமிறங்கிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் திரைப்படத்தின் பெயர் டிசி. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் டைட்டில் டீசர் வெளியானது. அதன்மூலம் இப்படமும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவர் டிசி படத்திற்காக ரூ.35 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். இதன்மூலம் இந்தியாவிலேயே அறிமுக படத்திற்காக அதிக சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற சாதனையை படைத்துள்ளார் லோகி. இதில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் லோகேஷின் பங்களிப்பு உள்ளதால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை வாரி வழங்கி இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். பல வருடங்களாக நடித்து வரும் தனுஷ், சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோர் தற்போது வாங்கி வரும் சம்பளத்துக்கு நிகராக லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே சம்பளம் வாங்கி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.