எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேனரனின் பிளான் சொதப்பியதால், அவர் ரெளடிகளிடம் போன் போட்டு கத்துகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் சக்தியை கொல்ல ஆள் அனுப்பி இருந்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பித்துச் சென்ற சக்தி, கண்ணதாசனை சந்தித்து தேவகி பற்றிய ரகசியங்களை தெரிந்துகொள்கிறார். அதுமட்டுமின்றி தேவகியை ஆதி குணசேகரன் தான் கொலை செய்தார் என்கிற உண்மையையும் சக்தியிடம் கூறுகிறார் கண்ணதாசன். அதேபோல் ஆதி குணசேகரனிடம் இருந்து தப்பிச் சென்ற ராணா எங்கு இருக்கிறார் என்பதை தன்னால் சொல்ல முடியாது என கூறிவிடுகிறார் கண்ணதாசன். இதையடுத்து ஊருக்கு கிளம்புகிறார் சக்தி. இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
எச்சரிக்கும் தர்ஷினி
மறுபுறம் ஆதி குணசேகரன் உடன் வெளியே சென்றிருந்த அன்புக்கரசி மீண்டும் வீட்டுக்கு வந்த நிலையில், அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் தர்ஷினி, உனக்கு பைனல் வார்னிங் கொடுக்குறேன். மரியாதையா நீயே இங்க இருந்து ஓடிரு, இல்லேனா பெரிய பிரச்சனை ஆகிடும் என சொல்ல, அதற்கு அன்புக்கரசி, பிரச்சனையை நீ இனிமே தான் பண்ணுவேன்னு சொல்ற, ஆனா நான் பொறந்ததுல இருந்தே பிரச்சனையோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன் என பதிலடி கொடுக்கிறார். அதனால இதுக்காகலாம் பயந்து என்னால ஓட முடியாது. உன்னால முடிஞ்சத நீ பாத்துக்கோ என சவால்விடும்படி பேசிவிட்டு வீட்டுக்குள் செல்கிறார்.
34
சவால்விடும் அன்புக்கரசி
பின்னர் ஜனனி, அன்புக்கரசியை பார்த்து முறைக்க, அவரிடம் இப்படியே முறைச்சிட்டு நிக்காம, அடுத்து ஏதாச்சும் பண்ணுங்க ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம் என சேலஞ் பண்ணிவிட்டு உள்ளே செல்கிறார் அன்பு. மறுபுறம் ஆதி குணசேகரன், இராமேஸ்வரத்தில் இருந்து எந்த அழைப்பும் வராததால், பதற்றத்துடனே நின்றுகொண்டிருக்க, அப்போது ஒரு போன் கால் வருகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து பேசும் அவரின் அடியாள், ஒரு சின்ன பிரச்சனை ஆகிடுச்சு என சொல்கிறார். சக்தி நம்ம ஆளுங்கள அடிச்சு விரட்டிட்டு சாமியாடி கூட தப்பிச்சு போயிட்டான் என சொல்கிறார்.
இதைக்கேட்டு டென்ஷன் ஆகும் ஆதி குணசேகரன், உன்னைமாறி அரைவேக்காட்டு பயலுகள நம்புனா இப்படி தான் கோட்டைவிட்டுட்டு நிக்கனும். நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனை புடுச்சு மடக்கி, அவன் கையில என்னென்ன இருக்கோ, அத்தனையும் புடுங்கிட்டு, அவனை அடிச்சு விரட்டி விடு என உத்தரவிடுகிறார். இதுல எதாவது தப்பு நடந்துச்சோ, நானே இராமேஸ்வரம் வந்து, உன்னை தேடிப்புடிச்சு வெட்டி கடல்ல போட்டிருவேன் என மிரட்டுகிறார். இதனால் பதறிப்போன அந்த ரெளடி, இந்த இராமேஸ்வரத்தை விட்டு அவனை தாண்ட விடமாட்டேன் என கூறுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.