வீடு என்பது அனைவருடைய வாழ்விலும் ஒரு அங்கமாக இருப்பது, சிறு வயதில் இருந்தே கஷ்டத்தை அனுபவித்த கிராமத்து மக்கள் பலர், இன்னும் மழை ஒழுகும் வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில், எதுவும் தெரியாத வெள்ளந்தியாக பிக்பாஸ் விளையாட்டை விளையாட துவங்கிய தாமரை, முதல் வாரத்திலேயே தலைவராக மாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
அதே போல், தன்னுடைய மகனுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக, பல முறை தாய் பாசத்தை முன்னிறுத்தி விளையாடிய தாமரை... தன்னுடைய மகனுடன் சேர்ந்து மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இதை தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்... தாமரையின் பெற்றோருக்கு வீடு காட்டிக்கொடுக்க உள்ளதாகவும், அவர்களுக்கு உதவும் மனம் படைத்தார்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
ஒரு ஹால், ஒரு ரூம், பூஜை அரை மற்றும் காற்றோட்டமாக ஜன்னல்... என ஒரு மெத்தை வீடாக எளிமையாக கட்டப்பட்டுள்ளது வீடு. வீட்டை சுற்றி, சுண்டைக்காய், தேங்காய், அரணாசி பழம், ஆடுகள் என கிராமத்து வாழ்க்கையை கண் முன் காட்டியுள்ளார்.
விரைவில், இந்த வீட்டின் பணிகள் முடிந்து விடும் என்றும்... அனைவரும் பால் காய்ச்ச வரவேண்டும் என அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமே அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது