என் காதலை ஏற்க யார் தயார்? மேலாடை இன்றி... ரோஜா மலரால் முன்னழகு மறைத்து புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தா!

First Published | Feb 14, 2023, 7:06 PM IST

நடிகை தர்ஷா குப்தா, கிக்கேற்றும் கவர்ச்சியில் முன்னழகை ரோஜா மலர்களால் மறைத்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது
 

கோயம்புத்தூரைச் சேர்ந்த கவர்ச்சி தேவதையான தர்ஷா குப்தா, சின்னத்திரை மூலம் தன்னுடைய நடிப்பை துவங்கியவர். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செந்தூரப்பூவே' சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தன்னுடைய அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டும் விதமாக 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். இந்த நிகழ்ச்சியில், இவர் புகழுடன் சேர்ந்து செய்த அலப்பறை குக் வித் கோமாளி நிகழ்ச்சி செட்டையே கலகலப்பாக மாற்றியது.

பிக்பாஸ் சுருதி லெஸ்பியனாக நடிக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'! ஃபர்ஸ்ட் லுக் காதலர் தினத்தில் வெளியீடு!
 

Tap to resize

மேலும் பைனல் வரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமையலில் செய்த சிறு சிறு தவறுகளால் பைனலில் பங்கேற்க முடியாமல் போனது. 

அதே போல் லாக் டவுன் சமயத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்த தர்ஷா குப்தாவுக்கு, இதன் மூலம்  திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

கர்ப்பமாக இருக்கும் தகவலை ரொமான்டிக்காக அறிவித்த சின்னத்திரை ஜோடி கண்மணி - நவீன்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய 'ருத்ர தாண்டவம்' படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்த தர்ஷா குப்தா, இந்த படத்தை தொடர்ந்து... கடந்தாண்டு சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த, 'ஓ மை கோஸ்ட்' என்கிற படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில், சன்னி லியோனையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை திணறடித்தார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு, இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

கைகூடாத காதல்! பயில்வான் ரங்கநாதனை துரத்தி... துரத்தி காதலித்த 3 நடிகைகள்..! அதில் ஒருவர் இவரா?

மேலாடை போடாமல் ரோஜா மலர்களால் தன்னுடைய முன்னழகை மறைத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளது மட்டுமின்றி, என் காதலை ஏற்க யார் தயார் என்று கேள்வியும் எழுப்பி உள்ளார்? 

இதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் வழக்கம் போல் பாசிட்டிவான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!