பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழக மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய இமாலய வெற்றியை பெற்றதற்கும், ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளதற்கும் முக்கிய காரணமாக இருப்பவர், நடிகரும், தொகுப்பாளருமான கமலஹாசன் எனலாம். முதல் சீசனில் இருந்து இப்போது வரை, எந்த இடத்தில் யாரை எப்படி கண்டிக்க வேண்டும்? யாரை திட்ட வேண்டும்... என பார்வையாளர்களின் பிரதிநிதியாக மேடைகள் நின்று பல்வேறு கேள்விகளால் போட்டியாளர்களை வெளுத்து வாங்குவார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனும் விரைவில் துவங்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு, பல இளம் நடிகர்கள் மற்றும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த காத்திருக்கும் பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை தாண்டி, ஓடிடியிலும், பிக்பாஸ் அல்டிமேட் என துவங்கப்பட்டு ஒளிபரப்பானது. இதில் பிக்பாஸ் போட்டியில் ஏற்கனவே கலந்து கொண்ட சில பிரபலங்கள் மீண்டும் கலந்து கொண்டு விளையாடினர். சில புதிய போட்டியாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.