தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர். இவருக்காக ரசிகர்கள் கோவில் கோவில் கூட காட்டியுள்ளனர். அதே போல் முதல் முதலாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் காட்டியுள்ளார்கள் என்றால் அது இவருக்கு தான்.
ஒரு கட்டத்தில் வெள்ளித்திரை படங்களை தொடர்ந்து, சின்னத்திரை ஹீரோயினாக மாறினார். அப்படி இவர் நடித்த கல்கி, நந்தினி, லட்சுமி ஸ்டார் போன்ற சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
தமிழை தவிர, தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் குஷ்பூ நடித்துள்ளார். தற்போது இவரது கை வசம் ஹாரா மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.