ஷங்கர் தயாரித்த ரெட்டைச்சுழி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் ஆரி. அப்படத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குனர்களாக பாலச்சந்தரும், பாரதிராஜாவும் இணைந்து நடித்திருந்தனர். இருப்பினும் அப்படம் பெரியளவில் ஆரிக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை படம் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
24
பின்னர் நயன்தாரா உடன் சேர்ந்து மாயா என்கிற திரைப்படத்தில் நடித்த ஆரியை மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஆரி, இறுதிப்போட்டி வரை முன்னேறியதோடு, பைனலில் பாலா உடன் போட்டி போட்டு டைட்டிலையும் தட்டித் தூக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார் ஆரி.
தற்போது இவர் கைவசம் அலேகா, பகவான், டி.என் 43 என மூன்று படங்கள் உள்ளன. இவை விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. நடிகர் ஆரிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் இலங்கை தமிழ் பெண்ணான நதியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த ரியா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தான் தற்போது மீண்டும் தந்தையாகி உள்ளதாக நடிகர் ஆரி அர்ஜுனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
44
Aari
அந்த பதிவில் அனைவருக்கு இனிய காலை வணக்கம், 9 மாதம் காத்திருப்புக்கு பின் நான் இப்போது ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன். குட்டி இளவரசனுக்கு பெருமைமிகு தந்தை ஆனதில் மகிழ்ச்சி என பதிவிட்டு இருந்தார். ஆரி அர்ஜுனனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.