இந்நிலையில், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பரும், அரசியல் மற்றும் சினிமா விமர்சகருமான டாக்டர் காந்தராஜ், யூடியூப்பில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து பேசி உள்ளார். ஸ்ரீதேவி பாத் டப்பில் விழுந்து இறந்துவிட்டார் என்று சொல்வது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை பணத்திற்காக தான் போனி கபூர் திருமணமே செய்துகொண்டார். ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ளும் போது போனி கபூருக்கு பெரிய மகன் இருந்தார். கிட்டத்தட்ட அவருக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரே வயது.