ஆன்மீக சுற்றுலா ஓவர்... ஃபாரின் ட்ரிப் கிளம்பிய சமந்தா - புது ஹேர்ஸ்டைலில் வெளியிட்ட கலக்கல் கிளிக்ஸ் இதோ

First Published | Jul 24, 2023, 11:26 AM IST

சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துள்ள நடிகை சமந்தா, தற்போது புது ஹேர்ஸ்டைல் உடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

samantha

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்ட சமந்தா, கடந்தாண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்தார். பின்னர் அதிலிருந்து படிப்படியாக குணமடைந்து வந்த சமந்தா, மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில் தற்போது சிட்டாடெல் என்கிற வெப் தொடரும், குஷி என்கிற தெலுங்கு திரைப்படமும் தயாராகி உள்ளது. இந்த இரண்டுமே ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

samantha

இதில் சிட்டாடெல் வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இந்த வெப் தொடரை ராஜ் மற்று டீகே இணைந்து இயக்கி உள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளம் தான் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது. அதேபோல் சமந்தா கைவசம் உள்ள குஷி படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா, இப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.


samantha

இதன்பின்னர் எந்த படங்களிலும் கமிட் ஆகாத சமந்தா, தற்போது சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள சிகிச்சை எடுப்பதற்காகவே சமந்தா விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக கடந்த சில தினங்களாக ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படியுங்கள்... தன்னம்பிக்கையும், லட்சியமும் இருந்தால் வெற்றி நிச்சயம் - கல்லூரி விழாவில் ஈரோடு மகேஷ் பேச்சு

samantha

இதற்கு அடுத்தபடியாக தற்போது வெளிநாட்டு சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டார் சமந்தா. அவர் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். 

samantha

அதில் புது ஹேர்ஸ்டைலில் காட்சியளிக்கிறார் சமந்தா. நீளமாக இருந்த தன்னுடைய தலை முடியை வெட்டி ஷார்ட் ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ள சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இந்த ஹேர்ஸ்டைல் சூப்பராக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். சமந்தாவின் இந்த நியூ லுக் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... என் தம்பிகளை இழந்திருக்கிறேன்... மின்சாரம் தாக்கி பலியான ரசிகர்கள் - வீடியோ காலில் ஆறுதல் சொன்ன சூர்யா

Latest Videos

click me!