திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் இவர் நடித்து வந்த நிலையில், பல சின்னத்திரை பிரபலங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு, ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது இந்த ஜோடி. இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் முற்றியதால் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. தினேஷ் ரக்ஷிதாவுடன் வாழ விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ஏனோ சில காரணங்களால் ரக்ஷிதா தொடர்ந்து அவருடன் வாழ மறுத்து வருகிறார்.