விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்கள் தற்போது தங்களுடைய நடன திறமையை வெளிப்படுத்திவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடி.
மிகவும் கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி கிட்ட தட்ட... செமி பைனலை எட்டியுள்ளது. எனவே மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி, கடுமையாக போட்டியிட்டு தங்களுடைய திறமையை நிரூபிக்கும் நிலையில் உள்ளனர் போட்டியாளர்கள்.
அந்த வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ராஜு ஜெயமோகன் முதல் ஆண் போட்டியாளர்களான அபிஷேக் ராஜா, தாமரையின் கணவர், சுஜா வருணி கணவர் சிவகுமார், ஆர்த்தியின் கணவர் கணேஷ், அமீர் போன்ற அனைவரும் நிஜ பெண்களையே தோக்கடிக்கும் விதத்தில் அச்சு அசல் பெண்கள் போலவே உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.