இந்நிலையில் சமீபத்தில் ஆதான் youtube-க்கு பேட்டி அளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், அன்புச்செழியன் வீட்டில் ரைடு நடந்திருப்பதால் சில காலங்கள் சினிமா முடங்க கூடும் என தெரிவித்துள்ளார். நேர்காணலில் பேசிய போது, 'நடிகர்களின் சம்பளமே 150 கோடிக்கு மேல் செல்வதால் படங்களுக்கு செலவிட முடியவில்லை என்றும், பட தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்பட்டால் எந்த நடிகரும் பொறுப்பேற்பதில்லை. கொடுக்க வேண்டிய காசை கொடுத்தே தீர வேண்டும் என கண்டிப்பு காட்டுகிறார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அமலா பாலின் 'அதோ அந்த பறவை போல' ..வெளியானது ரிலீஸ் தேதி !
அதோடு தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் ராம்சரண் உள்ளிட்டோர் படங்கள் தோல்வியை சந்திக்கும்போது தயாரிப்பாளர்களுக்கு தங்களது சம்பளத்தில் இருந்து பாதி தொகையை திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள் ஆனால் இந்த மனப்பான்மை தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுக்கு கிடையாது என கூறியுள்ளார்.