வாவ்... இது பிக்பாஸ் ஜனனியா? பார்க்க விண்ணை தாண்டி வருவாயா திரிஷா மாதிரி மாறிட்டாங்களே..! லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published | Feb 24, 2023, 11:50 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கை தொகுப்பாளர் ஜனனி, விண்ணை தாண்டி வருவாயா ஜெசி கெட்டப்பில், எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை இலங்கையில் இருந்து கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.

டூ பீஸ் உடையில்... அருவியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்யும் அமலா பால்..! வைரலாகும் வீடியோ..!

Tap to resize

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் போகிறது வருகிறார். அந்த வகையில் தற்போது, விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா போல்... சேலை அழகில் ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடனத்தில் ஜோதிகாவை பீட் பண்ணனும்.. 'சந்திரமுகி 2' படத்திற்காக கலா மாஸ்டரை மும்பைக்கு வர வைத்த கங்கனா!

Latest Videos

click me!