அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படம் 300 கோடி வசூல் சாதனை படைத்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தின் படபிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித் படப்பிடிப்புக்கு முன்னதாக தன்னுடைய குடும்பத்துடன் போர்ச்சுகளுக்கு சென்று வெகேஷனை செலபிரேட் செய்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி.. தன்னுடைய மகன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் நேரு ஸ்டேடியத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அஜித் பற்றி எந்த தகவல் வெளியானாலும் எப்படி அந்த செய்தியை வைரலாக்கி விடுகிறார்களோ, அதே போல் அவரின் மகன் மற்றும் குடும்பத்தை பற்றி எந்த செய்தி வந்தாலும், அந்த தகவல் படு வைரலாகி விடும். அப்படி தான் இந்த புகைப்படமும் அஜித் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
வித்தியாசமான அவுட் ஃபிட்டில் விருது விழாவில் கவர்ச்சியில் கலக்கிய ஸ்ரேயா சரண்..! வைரலாகும் புகைப்படங்கள்!