14 வருடங்களுக்கு பின் ஒன்று சேரும் ஈரம் கூட்டணி..! ஆதிக்கு ஜோடியாகும் நடிகை லட்சுமி மேனன்..!

Published : Feb 24, 2023, 09:06 PM IST

ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார்   

PREV
15
14 வருடங்களுக்கு பின் ஒன்று சேரும் ஈரம் கூட்டணி..! ஆதிக்கு ஜோடியாகும் நடிகை லட்சுமி மேனன்..!

தமிழ் திரையுலகில் அனைவரும் திரும்பி பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் தந்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் 'சப்தம்' படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன்  இணைந்துள்ளார்.

25

Aalpha Frames  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம்  “சப்தம்”. தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில்  மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இப்படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். 

நடனத்தில் ஜோதிகாவை பீட் பண்ணனும்.. 'சந்திரமுகி 2' படத்திற்காக கலா மாஸ்டரை மும்பைக்கு வர வைத்த கங்கனா!

35

இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் இனிதே நிறைவு செய்தனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் ஆதி லக்‌ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. 

45

நடிகை லக்‌ஷ்மி மேனன் இப்படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டராக  தயாரிப்பு குழுவினர் பகிர்ந்திருந்தனர். ரசிகர்கள் வெகு உற்சாகத்துடன் இச்செய்தியினை பகிர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

வித்தியாசமான அவுட் ஃபிட்டில் விருது விழாவில் கவர்ச்சியில் கலக்கிய ஸ்ரேயா சரண்..! வைரலாகும் புகைப்படங்கள்!

55

திரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன். இப்படத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது].

click me!

Recommended Stories