பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான சீரியல் நடிகை ஆயிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது வைரலாகி வருகிறது.
இதன் விளைவாக குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் கூட, பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டபோது, ஆயிஷா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
பிக்பாஸ் வீட்டில், தனலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்த போது, யோகேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடைய வீட்டில் சம்மதம் தெரிவித்த போதிலும்... தன்னுடைய வீட்டில் சம்மதிக்கவில்லை என கூறி இருந்தார்.
மேலும் ஏற்கனவே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டதாக, அவரின் முன்னாள் காதலர் என்று கூறி, தேவ் என்பவர் ஆயிஷா பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.