ஷாருக்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் பதான். இப்படம் இன்று இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் பெஷரம் ரங் என்கிற பாடலில் நடிகை தீபிகா படுகோனே காவி நிற பிகினி அணிந்திருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் அப்படத்தை புறக்கணிக்க வேண்டும் இந்து அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அதையும் மீறி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளதால், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்து அமைப்பினர் போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.