தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் கடந்த வாரம் தமிழ்நாட்டில் பெரியளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆக வில்லை. இருப்பினும் இந்த வாரம் பிகினிங் மற்றும் மெய்ப்பட செய் என்கிற நேரடி தமிழ் படங்களுடன் மூன்று டப்பிங் படங்கள் வெளியாகின்றன. அவை நண்பகல் நேரத்து மயக்கம், மாளிகப்புரம், பதான் ஆகிய படங்களாகும். இதில் நண்பகல் நேரத்து மயக்கம், மாளிகப்புரம் ஆகிய இரு படங்களும் மலையாள படத்தின் டப்பிங் ஆகும். அதேபோல் பதான் இந்தி பட டப்பிங் ஆகும்.
ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
ஓடிடியை பொறுத்தவரை இந்த வாரம் தமிழில் அயலி என்கிற வெப் தொடர் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப்தொடர் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் எங்க ஹாஸ்டல் என்கிற வெப் தொடரும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. படங்களில் திரிஷா நடிப்பில் கடந்த மாத இறுதியில் திரையரங்கில் ரிலீஸ் ஆன ராங்கி திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது.